காரியாபட்டி,
காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேசன் சார்பாக விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜனசக்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார் தலைமை வகித்தார். அறங்காவலர் சாவித்திரி முன்னிலை வகித்தார். திட்ட ஆலோசகர் ராஜ் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் அதனுடைய பயன்கள் குறித்து பேசினார். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். முடிவில் சக்திவேல் நன்றி கூறினார்.