அரசு ஊழியர்கள் 31 பேர் கைது

சிவகங்கையில் 7-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-09 08:10 GMT
சிவகங்கை,
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 2-ந் தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.. சிவகங்கை அரண்மனை வாசல் முன்பாக 7-வது நாளாக நேற்று நடைபெற்ற தொடர் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட இணைச்செயலாளர் வினோத் ராஜா தலைமை தாங்கினார். .தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பாண்டி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உமாநாத் மறியலை தொடங்கி வைத்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 31 பேரை நகர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்