கன்டெய்னர் லாரியில் 262 மின்விசிறிகள் மாயம்

உளுந்தூர்பேட்டையில் கன்டெய்னர் லாரியில் 262 மின்விசிறிகள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Update: 2021-02-09 06:52 GMT
உளுந்தூர்பேட்டை

சென்னையில் தனியார் மின் விசிறி தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து 750 மின்விசிறிகளை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று மதுரைக்கு புறப்பட்டது. சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த லிங்கமூர்த்தி (வயது 38) லாரியை ஓட்டினார்.

நள்ளிரவு 12.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் சிப்காட் பகுதியில் வந்தபோது லாரியை சாலையோரமாக நிறுத்தி விட்டு டிரைவர் தூங்கச் சென்றார். பின்னர் எழுந்து வந்த லிங்கமூர்த்தி லாரியை மதுரைக்கு ஓட்டிச் சென்றார். அங்கு மின்விசிறிகளை இறக்குவதற்காக லாரியின் பின்கதவுகளை திறக்க முயன்றபோது கதவுகள் ஏற்கனவே திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அதில் இருந்த 262 மின் விசிறிகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் என கூறப்படுகிறது. லாரியின் பின்கதவை திறந்து மர்ம நபர்கள் மின்விசிறிகளை திருடிச்சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து டிரைவர் லிங்க மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்