மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-09 06:46 GMT
கரூர்,

மின்வாரிய தலைவர் மற்றும் இணை இயக்குனரை மாற்றம் செய்ய வேண்டும். மின்வாரியத்தை தனியாருக்கு விற்கக்கூடாது. மின்சார சட்டம் 2020-ஐ அமல்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர்- கோவை சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ், சிறப்பு தலைவர் பரமேஸ்வரன், இணைசெயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலிவுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்