விருதுநகரில் தந்தை, மகளை தாக்கிய 2 பேர் கைது

விருதுநகரில் தந்தை, மகளை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Update: 2021-02-09 05:47 GMT
விருதுநகர்,

விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்தவர் அபிராமி (வயது 32).  தென்காசி மாவட்டம் நடுவப்பட்டியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்க்கும் இவர் நேற்று குடும்பத்துடன் வீட்டுக்கு வந்திருந்தார். 

வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக செனற கட்டையாபுரத்தைச்சேர்ந்த சுந்தர் (19), ஸ்டீபன் (25) ஆகிய 2 பேரும் குடிபோதையில் அபிராமியை அவதூறாக பேசிய நிலையில் அபிராமியின் தந்தை சந்திரசேகர் (68) அவர்களை கண்டித்தாராம். 

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இருவரும் சந்திரசேகரனின் கையில் பிளேடால் அறுத்ததுடன் செங்கல்லையும் வீசி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.  மேலும் அங்கு அமர்ந்திருந்த அபிராமியின் சகோதரி கார்த்தீஸ்வரி மீது கற்களை வீசி படுகாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் பஜார் போலீசார், சுந்தர் மற்றும் ஸ்டீபன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும் செய்திகள்