கோவையில் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

கோவையில் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார்.

Update: 2021-02-09 05:13 GMT
கோவை,

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் எபிநேசர் துரைராஜ் (வயது 47). இவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

பின்னர் திருப்பூர் விரைவு கோர்ட்டில் எபிநேசர் துரைராஜுக்கு 3 ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள கைத்தறி தொழில் கூடத்தில் நேற்று வேலை செய்து கொண்டு இருந்தபோது எபிநேசர் திடீரென்று மயங்கி விழுந்தார். 

சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். போகும் வழியில் அவர் இறந்து போனார். 

ஆயுள் தண்டனை கைதிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 20-ந்தேதி வலிப்பு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் சிகிச்சைக்கு பின்னர் சிறைக்கு கொண்டு வரப்பட்டதாகவும், உடல்நலக்குறைவினால் இறந்து இருப்பதாகவும் சிறைத்துறையினர் தெரிவித்தனர்.

கைதி இறந்தது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்