அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-08 22:14 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதற்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜான்பீட்டர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி ஆகியோர் தலைமை தாங்கினர். 

இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி துணை பொதுச்செயலாளர் கணேசன், உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி உள்ளிட்ட நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 

இதற்காக ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்