கடலூாில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்:43 போ் கைது

கடலூாில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 43 பேரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2021-02-08 21:20 GMT
கடலூர்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட வேண்டும். மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறையில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் என கூலி முறை பெறுவோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இதையொட்டி நேற்று காலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் கடலூர் மஞ்சக்குப்பம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசு ஊழியர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கடலூர் புதுநகர் போலீசார் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் 43 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்