ஏர்வாடியில் மரநாய் மீட்பு

ஏர்வாடியில் மரநாய் மீட்கப்பட்டது.

Update: 2021-02-08 20:49 GMT
ஏர்வாடி:
ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று ஒரு மரநாய் சுற்றி திரிந்தது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மரநாயை உயிருடன் பிடித்தனர். அதன் பின் மணிமாறன் என்பவர் இதுபற்றி திருக்குறுங்குடி வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினரிடம், பொதுமக்கள் மரநாயை ஒப்படைத்தனர். அவர்கள் மரநாயை பத்திரமாக கொண்டு சென்று திருக்குறுங்குடி நம்பி கோவில் பீட் வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்