போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 24-வது நாளான நேற்று 7 போலீசார், 101 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 108 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2,210 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.