பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்லடம், :-
தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு பல்லடம் மின் வட்டக்கிளை சார்பில் மின் வினியோகம் மற்றும் மின் வாரிய பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கூடாது என்பதை வலியுறுத்தி பல்லடம் மின் வட்ட மேற்பார்வையாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சங்கத்தின் பல்லடம் மின்பகிர்மான வட்ட கிளை பொருளாளர் ஜான்சன் சாமுவேல் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் பல்லடம் கிளைத்தலைவர் அங்குராஜ், செயலாளர் கந்தசாமி, ராமசந்திரன் (ஐக்கிய சங்கம்), ராமலிங்கம் (சி.ஐ.டி.யு), உத்திரகுமார் (தொ.மு.ச.), சுரேஷ்ராஜ் (பொறியாளர் சங்கம்), பழனிசாமி, முத்துசாமி (சம்மேளனம்) உள்பட 70 பேர் கலந்துகொண்டனர்.