93 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில்93 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

Update: 2021-02-08 14:13 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி உள்பட 5 மையங்களில் தொடங்கி நடந்து வருகிறது. 22-ம் நாளான நேற்று ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 6 டாக்டர்கள், 19 செவிலியர், 12 மருந்தாளுனர், 21 சுகாதார பணியாளர்கள், போலீஸ் காவலர்கள் 2 பேர் என 60 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதேபோல, பரமக்குடி சுகாதார வட்டத்தில் உள்ள 4 மையங்களில் நேற்று 3 டாக்டர், 3 செவிலியர்கள், 27 சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 33 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மொத்தம் மாவட்டத்தில் நேற்று 93 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்