தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-02-08 12:02 GMT
சாயர்புரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
லாரி டிரைவர்
சாயர்புரம் அருகே உள்ள சிவத்தையாபுரம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 49). லாரி டிரைவர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பட்டு ரோஜா இவரை விட்டு பிரிந்து சென்று விட்டாா். இதனால் மனமுடைந்த ரவீந்திரன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கினார். 
உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவீந்திரன் பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
விவசாயி
ஆத்தூர் அருகே உள்ள முக்காணி செந்தில்நகரைச் சேர்ந்தவர் வன்னிய ராஜா மகன் சுடலைமுத்து (36). விவசாயி. இவருக்கு முப்பிடாதி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சுடலைமுத்து அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவது வழக்கம். 
கடந்த 3-ந் தேதி குடித்துவிட்டு வீட்டில் சென்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுடலைமுத்து வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுடலைமுத்து பரிதாபமாக இறந்தார். 
இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்