பூத்துக்குலுங்கும் மாமரங்கள்

பூத்துக்குலுங்கும் மாமரங்கள்

Update: 2021-02-08 11:08 GMT
நத்தம்:


நத்தம் பகுதியில் பரளி, வத்திப்பட்டி, காசம்பட்டி, லிங்கவாடி, மலையூர், முளையூர், உலுப்பக்குடி, புன்னப்பட்டி, பாலப்பட்டி, மணக்காட்டூர், மலைக்கேணி, குடகிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாந்தோப்புகள் உள்ளன. 

கடந்த மாதம் பெய்த தொடர் மழை எதிரொலியாக, மாமரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. 

தற்போது அவை பூத்து குலுங்குகின்றன. 

வருகிற ஏப்ரல் மாதம் இறுதியில், மாம்பழ அறுவடை சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து மா விவசாயிகள் கூறுகையில், போதிய அளவு மழை பெய்த போதிலும் 50 சதவீத மாமரங்களே பூத்துள்ளன. 

இதனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்