பி.மேட்டூரில் அரசு நெல் கொள்முதல் மையம் திறப்பு
பி.மேட்டூரில் அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பி.மேட்டூரில் அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள இப்பகுதி விவசாயிகள், சம்பா பருவத்தில் சன்ன ரக, சீரக நெல் வகையும், பொன்னி, அக்சயா, பிபிடி வகைகளும், பருவம் தவறி பயிறிடப்பட்ட ஏடிடி43, கோ51, ஏஎஸ்டி16, ஏடிடி 36 ஆகிய நெல்வகைகளும் பயிரிடப் பட்டு அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி, பி.மேட்டூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில், ஆரம்பிக்கப் பட்டுள்ள அரசு தற்காலிக நெல் கொள்முதல் மையத்தில், நாள் ஒன்றுக்கு 40 டன் நெல் கொள்முதல் செய்யும் இலக்குடன், சன்னரக நெல் கிலோ ஒன்றுக்கு ரூ.19.58 எனவும், பெருவெட்டு ரகத்திற்கு ரூ.19.18 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இடம் தேர்வு செய்து, கட்டிட வசதி, தானியங்களை உலர வைக்கும் கள வசதியுடன், நிரந்தர நெல் கொள்முதல் மையம் அமைக்க, விவசாயிகளின் நலன் கருதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.