13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேறு சரகத்திற்கு பணியிட மாற்றம்
விருதுநகர் மாவட்டத்தில் 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை வேறு சரகத்திற்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. முருகன் உத்தரவிட்டுள்ளார்.
விருதுநகர்,
தென்மண்டல ஐ.ஜி. முருகன் மண்டலத்தில் பணியாற்றும் 98 இன்ஸ்பெக்டர்களை வேறு சரகத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதில் மாவட்டத்தில் இருந்து 13 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வேறு சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு:-
கிழக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சம்பத், நரிக்குடியில் பணியாற்றும் மூக்கன், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தென்றல், சேத்தூரில் பணியாற்றும் பவுல் ஏசுதாசன், சாத்தூர் மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் பானுமதி, ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தேவமாதா, தளவாய்புரத்தில் பணியாற்றும் முத்துக்குமரன் ஆகியோர் திண்டுக்கல் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை சரகம்
விருதுநகர் ஏ.சி.டி.யூ. பிரிவில் பணியாற்றும் கீதா பெரிய நாச்சியாரும் திண்டுக்கல் சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் பணியாற்றும் கண்ணாத்தாள், திருத்தங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் ராஜா, சாத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சமீம் பானு, பொருளாதார குற்றப்பிரிவில் பணியாற்றும் சுமதி, ராஜபாளையத்தில் பணியாற்றும் சங்கர் கண்ணன் ஆகியோர் நெல்லை சரகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.