கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கூட்டம்

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-02-08 04:40 GMT
பெரம்பலூர்,

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழக அரசின் மூலம் முதற்கட்டமாக பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி நிர்வாக களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்திபன் தலைமை தாங்கினார். இதில் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி குறித்து ஏற்பட்ட சந்தேகங்களுக்கு, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் கீதாராணி விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (தலைமையிடம்) கார்த்திகேயன், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நீதிராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்