வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-02-08 03:13 GMT
பக்ருதீன்
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கடைவீதியை சேர்ந்தவர் பக்ருதீன்(வயது 21). கடந்த மாதம் மீன்சுருட்டி அருகே உள்ள வீரசோழபுரத்தில் விவசாயியிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து, ஆடு திருடிய வழக்கில் பக்ருதீனை மீன்சுருட்டி போலீசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது அடிதடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், பக்ருதீனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டர் ரத்னாவுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பக்ருதீனிடம், இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழங்கினார்.

மேலும் செய்திகள்