பாப்பாரப்பட்டி அருகே, புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

பாப்பாரப்பட்டி அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தர்மபுரி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2021-02-08 01:27 GMT
பாப்பாரப்பட்டி

தர்மபுரி மாவட்டம் பாரப்பாரப்பட்டி அருகே உள்ள பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபி. செங்கல் சூளை தொழிலாளி. இவருடைய மனைவி ஹேமாவதி (வயது 20). இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்தநிலையில் கடந்த மாதம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புதுப்பெண் ஹேமாவதி விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை, குடும்பத்தினர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்தநிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஹேமாவதி நேற்று  பரிதாபமாக இறந்தார். திருமணமான ஒரு ஆண்டில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுகுறித்து உதவி கலெக்டர் பிரதாப் மற்றும் பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுந்தரராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்