திருப்புவனம் விவசாயி கொலையில் 5 பேர் கைது

திருப்புவனம் விவசாயி கொலையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-08 00:54 GMT
திருப்புவனம்,

திருப்பாச்சேத்தி மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோபால்(வயது 60). விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது தோட்டத்திற்கு சென்றபோது அவரை ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது. இதுகுறித்து மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், திருப்பாச்சேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோபால் மருமகள் விமலாதேவி மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். 

உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த வழக்கில் செந்தில்முருகன்(36), சூர்யா(25), அன்பரசன்(32), கதிர்வேலு(36), தேவராஜன்(61) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்