குளித்தலையில், குதிரை-மாட்டு வண்டி பந்தயம்

குளித்தலையில், குதிரை-மாட்டு வண்டி பந்தயம்.

Update: 2021-02-07 23:23 GMT
குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள குட்டப்பட்டி பகுதியில் குதிரை பந்தயம் நேற்று நடைபெற்றது. குளித்தலை - மணப்பாறை சாலையில் நடந்தது. பந்தயம் சிறிய, பெரிய, புதிய குதிரைகள் என தனித்தனியாக நடந்தது. இதனை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் ஒவ்வொரு குதிரை பந்தயத்திலும் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த ரேக்ளா பந்தயத்தை காண குளித்தலை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பொதுமக்கள் சாலையோரம் நின்று இந்த பந்தயங்களை கண்டு ரசித்தனர். 

இதேபோல் சிறிய, பெரிய ஒற்றை மாடுகள், இரட்டை மாடுகள் கலந்து கொண்ட மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் கலந்து கொண்டு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்