மின் கம்பத்தில் அரசு பஸ் மோதி விபத்து
மின் கம்பத்தில் அரசு பஸ் மோதி விபத்து
வெள்ளியணை
கரூரிலிருந்து வரவணைக்கு நேற்று மாலை சென்ற அரசு டவுன் பஸ், பின்னர் கரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தது. அப்போது காணியாளம்பட்டி வடக்கு தெரு பகுதியில், சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மின் கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்ததில், மின் கம்பிகளில் தானாகவே மின் வினியோகம் தடைப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பான சூழ்நிலையும் நிலவியது.