மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் இறந்தார்

Update: 2021-02-07 21:32 GMT
ஈரோடு முத்துரெட்டியூர் காலனி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 25). வெல்டர். இவர் நேற்று காலை ஈரோடு காவிரி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது காலிங்கராயன் வாய்க்கால் அருகில் சென்றபோது ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரதாப் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரதாப் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த பிரதாப்புக்கு மகேஸ்வரி (20) என்ற மனைவியும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.

மேலும் செய்திகள்