கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை

கடலூர் மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினா்.

Update: 2021-02-07 20:31 GMT
கடலூர் முதுநகர், 

 கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் உத்தரவின் பேரில், நேற்று காலை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி தலைமையில், 100-க்கும் மேற்பட்ட போலீசார் கடலூர் மத்திய சிறைச்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது கைதிகளிடம் போதை பொருட்கள், செல்போன்கள், ஆயுதங்கள் ஏதேனும் உள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது. இதில் சில பீடி கட்டுகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த சோதனையின்போது வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, கடலூர் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் உள்பட சிறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்