ராமநாதபுரத்தில் வாகனம் மோதி பெண் பலி
ராமநாதபுரத்தில் வாகனம் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மஞ்சன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மூக்கையா என்பவரின் மனைவி இளஞ்சியம் (வயது 47) இவர் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபரை தேடிவருகின்றனர்.