நெல்லிக்குப்பம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

நெல்லிக்குப்பம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-02-07 17:35 GMT
நெல்லிக்குப்பம்:

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. வரக்கால்பட்டு அருகே வந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம், கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர் வரக்கால்பட்டை சேர்ந்த சிவகுரு (வயது 25) என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். 

இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து சிவகுருவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்