அரசு ஊழியர்கள் 6-வது நாளாக சாலைமறியல்

தேனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 6-வது நாளாக சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-02-07 16:28 GMT
உப்புக்கோட்டை:

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த 2-ந்தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. 

அதன்படி தேனி தொழிற்பயிற்சி நிலையம் முன் நேற்று 6-வது நாளாக சாலைமறியல் போராட்டம் நடந்தது.


இதற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர் துணைக் குழு உறுப்பினர் ஜானகி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். 


40 பேர் கைது


இதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்