தூத்துக்குடி ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்; விவசாயம் செழிக்க வேண்டுதல்

தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் தைப்பூச விழா, குருபூஜை, விநாயகர் பூஜை, சக்திபூஜையுடன் தொடங்கியது.

Update: 2021-02-07 12:34 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் தைப்பூச விழா, குருபூஜை, விநாயகர் பூஜை, சக்திபூஜையுடன் தொடங்கியது. மக்கள் வளமுடன் வாழவும், இயற்கை சீற்றம் தணியவும், தொழில் வளம் பெருகவும் கலசவிளக்கு வேள்வி பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து விவசாயம் செழிக்க வேண்டி அன்னை ஆதிபராசக்திக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அனல்மின்நிலைய தலைமை பொறியாளர் பக்தவச்சலம், உதவி செயற்பொறியாளர் பிரசாத், செயற்பொறியாளர்கள் ஜெகதீசன், ஏகாந்த லிங்கம், வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா, மகளிர் அணி திலகவதி, பொருளாளர் கண்ணன், இளைஞர் அணி செல்லத்துரை, ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்