வீராணம் பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

வீராணம் பகுதியில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு.

Update: 2021-02-07 06:11 GMT
சேலம்,

சேலம் அருகே வீராணம் வலசையூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அருள் (வயது 29). பெயிண்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென காணவில்லை. இதேபோல், டி.பெருமாபாளையம் அண்ணாநகரை சேர்ந்த பெரியசாமி (40) என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அருள் மற்றும் பெரியசாமி ஆகியோர் வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீராணம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 வாரத்தில் 7 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போயுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்