ஆவுடையார்கோவில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

ஆவுடையார்கோவில் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-02-07 06:08 GMT
ஆவுடையார்கோவில், 

ஆவுடையார்கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் வடக்கு பகுதியில் உள்ள கட்டிடம் சேதம் அடைந்துள்ளது. குறிப்பாக கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகளில் கீறல் விட்டும், பெயர்ந்தும் காணப்படுகிறது. எனவே இவைகளை சீரமைத்து பள்ளிக்கு வர்ணம் பூச வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்