வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்வு
வரத்து குறைவால் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளது.
நொய்யல்,
கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்குச்சாலை, மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய்கள் முதிர்ச்சி அடைந்தவுடன் பறித்து, அதில் இருந்து தேங்காய் பருப்பு எடுத்து காய வைத்து விற்பனை செய்கின்றனர். மேலும் பல்வேறு எண்ணெய் நிறுவனங்களும் தேங்காய் பருப்பு அனுப்படுகிறது. தற்போது வரத்து குறைவால் கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூ.130-க்கு விற்றது தற்போது ரூ.34-க்கு விற்பனையாகிறது. அதேபோல் ஒரு முழு தேங்காய் ரூ.32-க்கு விற்பனையாகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.