ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்,
63 மாதமாக பஞ்சப்படி வழங்காததை கண்டித்து நேற்று திருமாநிலையூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் ராஜன், பொருளாளர் ராமகிருஷ்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், மத்திய சங்க நிர்வாகி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.