சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு.

Update: 2021-02-07 00:04 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 பேர், வீரபாண்டி, கொளத்தூர், ஆத்தூர், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 486 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்