பழனி
திண்டுக்கல் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பஸ்நிலைய ரவுண்டானாவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார்.
கோட்ட செயலாளர் பாலன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் கிஷோர்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பழனி படிப்பாதையில் பிற மதத்தினர் வைத்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.
பழனியில் மதகலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் பலர் கலந்துகொண்டனர்.