உழவர் உழைப்பாளர் கட்சியினர் 150 பேர் கைது
உழவர் உழைப்பாளர் கட்சியினர் 150 பேர் கைது
பல்லடம்,:
மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. இந்த நிலையில் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், அடுத்த கட்டமாக நேற்று பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்திருந்தனர். இதன்படி உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் தலைவர் செல்லமுத்து தலைமையில் பல்லடம் அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் சின்னகாளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட செயலாளர் வாவிபாளையம் சோமசுந்தரம், ஊடக பிரிவு செயலாளர் காடம்பாடி ஈஸ்வரன் உள்பட 150 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் 150 பேரையும் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் சுமார் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.