28 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி பணியிடமாற்றம்
28 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்
ராமநாதபுரம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் காவல்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 28 இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ராமநாதபுரம், கமுதி சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றிவரும் ஆய்வாளர்களும் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவினை ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. மயில்வாகனன் பிறப்பித்துள்ளார்.