தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா கொடியேற்றம்
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன், நற்செய்தி நடுவம் இயக்குனர் ஸ்டார்வின் ஆகியோர் தலைமை தாங்கி, ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றி வைத்தனர். தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் 13-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் மற்றும் கீழ வைப்பார் பங்கு தந்தை ஆன்டனி ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் திருப்பலி, சிறப்பு ஆராதனை நடக்கிறது.
சிறப்பு திருப்பலி
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலியும், ஆராதனையும் நடக்கிறது. தொடர்ந்து புனித லூர்து அன்னை இளையோர் நடத்தும் விளையாட்டு போட்டிகளும், மாலையில் அன்பியங்கள் இணைந்து வழங்கும் கலைவிழாவும் நடக்கின்றது. விழா நாட்களில் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலிகளை அன்பிய மக்கள் செய்கின்றனர்.
ஏற்பாடுகளை பங்கு தந்தை ஆன்டனி புருனோ தலைமையில் பங்கு பேரவையினர் செய்து வருகின்றனர்.
-----------