ஆட்டோ மோதி முதியவர் பலி
திருச்சியில் ஆட்டோ மோதி முதியவர் ஒருவர் பலியானார்.
திருச்சி,
திருச்சி சுப்ரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரை சேர்ந்தவர் ராபர்ட் ஆம்புரோஸ் (வயது 75). இவர் கடந்த 3-ந்தேதி திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஆட்டோ ஒன்று ராபர்ட் ஆம்புரோஸ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.