ஆத்தூர் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி தாய் கண்முன்னே பரிதாபம்
ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பலி தாய் கண்முன்னே பரிதாபம்
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் புதுஉடையாப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகேசன். கூலித்தொழிலாளி. இவரது மகன் செல்லத்துரை (வயது 15). இவன் நரசிங்கபுரம் அரசினர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று தனது தாய் தங்கம்மாளுடன் அதே பகுதியில் உள்ள வசிஷ்ட நதியில் துணி துவைத்து விட்டு, குளிக்க சென்றான். அப்போது திடீரென ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று சேற்றில் சிக்கிக் கொண்டான். செல்லத்துரையின் அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் செல்லத்துரை பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.