பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில், மாவட்ட பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ்மோகன் தலைமை தாங்கினார். வகில், தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பலா் கலந்து கொண்டு, பொது சுகாதார துறையில் சுகாதாரப்பணிகளின் துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவம் இல்லாத மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களுக்கு பதவி உயர்வுகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.
முடிவில் சங்கத்தின் பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.