பெரம்பலூாில் தீயணைப்பு வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரம்பலூாில் தீயணைப்பு வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர்,
சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீயணைப்பு வீரர்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயராஜ், பெரம்பலூர் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாகன ஓட்டிகள் மத்தியில் பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சாலை விபத்துகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும், அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் தத்ரூபமாக நடித்துக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.