கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அவதி

பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் விற்க தடை: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அவதி

Update: 2021-02-05 20:45 GMT
கொடைக்கானல்:


மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுப்படி கொடைக்கானல் நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த 1-ந்் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு கடைகளில் 1 லிட்டர், 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தற்போது விற்கப்படுவதில்லை. 

ஆனால் 5 லிட்டர், 10 லிட்டர் பாட்டில்கள் விற்கப்படுகிறது. 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் வழங்கும் தானியங்கி எந்திரங்கள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை அந்த எந்திரங்கள் வைக்கப்படவில்லை. 

இதனால் தண்ணீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் செய்திகள்