திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசி திருவிழா நேற்று கொடியேற்றுடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்பு கொடிபட்டம் வீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்து சேர்ந்தது. கும்ப பூஜை, வாஸ்து சாந்தியை தொடர்ந்து அதிகாலை 5.25 மணிக்கு மேளதாளங்கள் முழங்க முத்துராஜன் வல்லவராயர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் விதாயகர்த்தா சிவசாமி திட்ஷீதர், திருவிழா பிரிவு அலுவலர் பிச்சையா, மணியம் நெல்லையப்பன், வேலாண்டி ஒதுவார், காந்தி தினசரி மார்க்கெட் சங்க தலைவர் பழக்கடை திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.