ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக அச்சக உரிமையாளரிடம் மோசடி

திருப்பத்தூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம்எடுத்து தருவதாக அச்சக உரிமையாளரிடம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-02-05 16:56 GMT
திருப்பத்தூர்

பணம் எடுத்து தருவதாக மோசடி

திருப்பத்தூர் தாலுகா பால்னாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர்  பிரகாஷ் (வயது48) அச்சகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று திருப்பத்தூர்- வாணியம்பாடி சாலையில் உள்ள ஏ.டி.எம். மாயத்துக்கு  சென்று ரூ.6,600 எடுக்க முயன்றுள்ளார். அப்போது அருகிலிருந்த திருப்பத்தூர் காந்திநகர் புதுப்பேட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (45) என்பவர், பணம் எடுக்க உதவுவதாக கூறி பிரகாஷ் ஏ.டி.எம். கார்டை வாங்கி, ரகசிய எண்ணை தெரிந்துகொண்டு தன்னிடம் ஏற்கனவே இருந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் வரவில்லை எனக்கூறி தன்னிடம் இருந்த கார்டை பிரகாஷிடம் கொடுத்து, வங்கி மேலாளரிடம் கேட்கும்படி கூறி உள்ளார். 

பின்னர் பிரகாஷ் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி அவருடைய கணக்கில் இருந்து ரூ.6,600-ஐ எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார், பணம் எடுத்த குறுஞ்செய்தி பிரகாஷ் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது.

 கைது

உடனடியாக இதுகுறித்து வங்கிக்குச் சென்று மேலாளரிடம் கேட்டுளளார். உடனே அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, ராஜேஷ் பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது.

 இதுகுறித்து பிரகாஷ் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தார். அவரிடமிருந்து 20 போலி ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டது. 

மேலும் செய்திகள்