3-வது நாளாக அரசு ஊழியர்கள் மறியல்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில 3-வது நாளான நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3-வது நாளான நேற்று வினோத்ராஜா தலைமையில் சிவகங்கை அரண்மனை வாசலில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் போராட்ட விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச்செயலாளர் முத்துப்பாண்டி மறியலை தொடங்கி வைத்து பேசினார். மறியலில் 52 பெண்கள் உள்பட 70 பேர் கலந்து ெகாண்டனர். அவர்களை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.