கடந்த 10 ஆண்டுகளில் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 18 ஆயிரம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை
சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பாலாஜி தலைமை தாங்கி, டாக்டர்கள், மருத்துவ மாணவர்களுடன் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்.
சென்னை,

இதையடுத்து, அறிகுறி வந்ததும் முன்கூட்டியே பரிசோதனை செய்வதன் மூலம் புற்றுநோயை கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்வதன் பயன் குறித்து மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.
இதுகுறித்து மருத்துவமனை ‘டீன்’ பாலாஜி கூறியதாவது:-
வடசென்னையில் உள்ள பெரும்பாலான புற்றுநோயாளிகள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 18 ஆயிரம் புற்றுநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து, சிகிச்சைக்கு பின் அவர்களை கண்காணிக்க கூடிய அனைத்து வசதிகளும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.