சேலத்தில் பொதுமக்களுக்கு குப்பை கூடைகள்

சேலம் சீலநாயக்கன்பட்டி, சக்தி நகர், அருணாசலம் தெரு, பத்மாவதி அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கு குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-02-05 01:58 GMT
சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி, சக்தி நகர், அருணாசலம் தெரு, பத்மாவதி அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களில் வசிப்பவர்களுக்கு குப்பை சேகரிக்கும் கூடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி நீலம் மற்றும் பச்சை நிறம் என பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 குப்பை கூடைகளை வழங்கி 
பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுற்றுப்புறம் மற்றும் சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் உருவாக வேண்டும். அதன்படி வீட்டில் சேரும் மக்கும் குப்பைகளை வீட்டிலேயே உரமாக மாற்றி தங்கள் குடியிருப்பு பகுதியிலோ, மாடி தோட்டத்திலோ உள்ள செடிகளுக்கு பயன்படுத்த பொதுமக்கள் பழகிகொள்ள வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்