தூய்மை பணியாளர் வேலைக்கு நேர்காணல்; 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தூய்மை பணியாளர் வேலைக்கு நடந்த நேர்காணலில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Update: 2021-02-05 00:09 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் (பகுதிநேரம்) பணியிடத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. 

இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாக நேர்காணல் நடைபெறும் இடத்துக்கு விண்ணப்பதாரர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்தும், அரங்கினுள் சமூக இடைவெளியுடனும் அமர்ந்து இருந்தனர்.

மேலும் செய்திகள்