போக்சோ சட்டத்தில் சமையல் தொழிலாளி கைது
மயிலாடுதுைறயில் போக்சோ சட்டத்தில் சமையல் தொழிலாளிைய போலீசாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் போக்சோ சட்டத்தில் சமையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சமையல் தொழிலாளி கைது
மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளி ஒருவர், தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தநிலையில் சிறுமி கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சிறுமியிடம் தாய் விசாரித்ததில், சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.