கோவையில் அரசு ஊழியர்கள் 2 வது நாளாக முற்றுகை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் அரசு ஊழியர்கள் 2 வது நாளாக முற்றுகை கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-04 06:46 GMT
கோவை
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்ராஜ், செயலாளர் செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்லாதவாறு கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.சந்திரன், சத்துணவு- ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி ஆகியோர் பேசினார்கள்.

இதைத் தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட 130 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்டும் வரையில் கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி இரவு முழுவதும் திருமண மண்டபத்திலேயே போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்